இனி ஆப்பிளின் 'சிரி' வழியாக வாட்ஸப் செய்திகள் அனுப்பலாம்!
ஆப்பிளின் ஐஓஎஸ் செயலி பயன்படுத்துபவர்கள் இனி அவர்கள் போனில் உள்ள 'சிரி' வழியாக வாட்ஸப் செய்திகள் அனுப்ப முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஆப்பிளின் ஐஓஎஸ் செயலி பயன்படுத்துபவர்கள் இனி அவர்கள் போனில் உள்ள 'சிரி' வழியாக வாட்ஸப் செய்திகள் அனுப்ப முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தொழில்நுட்ப விஷயங்களுக்கான இணையதளமான 'வெஞ்சர்பீட்' வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்பிளின் ஐஓஎஸ் செயலி-10 இன்று முதல் தனது அனைத்து பயனாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இதன் படி வெளி நிறுவன மென்பொருட்டுக்களை ஐபோனுடன் எளிதாக ஒருங்கிணைக்க முடியும். இதனை பயன்படுத்தி புகழ் பெற்ற சமூக வலைத்தளமான முகநூலுடன் இணைத்துள்ள செய்தி பரிமாறும் செயலி 'வாட்ஸப்' தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலும்.
இந்தமுறை குறித்து ஐபோனின் உதவு செயலியான 'சிரி ' வழிநடத்தும். அதனை பின்பற்றி எந்த செய்தியை அனுப்ப வேண்டும்? யாருக்கு அனுப்ப வேண்டும்? என்பன உள்ளிட்ட விஷயங்களை தேர்வு செய்ய இயலும்.
இதனை பயன்படுத்த உங்கள் ஐபோனில் ஆப்பிளின் ஐஓஎஸ் செயலி-10 மற்றும் தரம் உயர்த்தப்பட்ட வாட்சப் செயலி இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...